கொரோனா கால கட்டத்தில் மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வர காமெடியாக ஏதேனும் எழுதுங்கள்!

 கொரோனா கால கட்டத்தில் மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வர காமெடியாக ஏதேனும் எழுதுங்கள்! 

என்று வாசகர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க!!

காமெடி கதையை எழுத முயற்சி செய்கிறேன். 


ஜோதிடர்களில் மிக அனுபவம் வாய்ந்த ஜோதிடரை கேள்வி - பதில் மூலம் தேர்ந்தெடுத்து அந்த ஜோதிடருக்கு  பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்படும் என்ற அரசாங்க அறிவிப்பு வெளியான மகிழ்ச்சியில் நம்முடைய ஹுரோ ( அவரும் ஒரு ஜோதிடர் )

பரிசு பொருளை பெற ஆயுத்தமானார்.


எப்படியாவது பரிசு பணத்தை வென்று! 'பால்காரன்' கணக்கை தீர்த்து விட வேண்டுமென்று!! கங்கணம் கட்டிக்கொண்டு போட்டிக்கு தயாரானார். 


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட இணையுங்கள்....


meenakshe Jothidalayam / Facebook /page


meenaksheJothidalayam2010.blogspot.com

meenakshe-Jothidalayam.business.site 

meenakshe Jothidalayam /YouTube 


போட்டி நாளன்று அரங்கத்திற்கு சென்று பரிசு தரும் நடுவருக்கு ஒரு வணக்கத்தையும், தனக்கு போட்டியாக வந்த 'ஜோதிடர்களை' மனதில் சபித்துக்கொண்டே அவர்களுக்கு மற்றொரு வணக்கத்தையும் வைத்து தன் இருக்கையில் அமர்ந்தார். 


போட்டிக்கு வந்த மற்ற ஜோதிடர்களின் முகபாவனையை பார்த்தவுடன்! நம்முடைய கதாநாயகனுக்கு வயிற்றில் சற்றே புளியை கரைக்க தான் செய்தது. 


பால்காரனின் கடன் கண்முன்னே வந்து சென்றவுடன் பரிசு தொகையை வென்றே தீருவது! என்ற தீர்மாணத்துடன்!! தனக்கான தருணத்தை நோக்கி ஜோதிடர் காத்திருந்தார்.


நடுவர் கேட்கும் கேள்விக்கு மற்ற ஜோதிடர்கள் கூறும் பதில்  நம் காதில் விழுந்தால்!

 எங்கே நாம் பயத்தில் உளறி விடுவோம்!! என்ற அச்சத்தில் தன்னுடைய இரு காதுகளையும் இறுக பொத்திக் கொண்டார்.


நடுவரின் அழைப்பை ஏற்று அவரின் முன் அமர்ந்த ஜோதிடர் தான் அமர்ந்த திசையை கணக்கிட்டு 

அதிர்ந்து போய் விட்டார். 


ஏனென்றால் நம் ஹீரோ அமர்ந்த பகுதி அக்னி மூலை.

சற்றே கடுப்பான ஜோதிடர் இன்று எக்காரணத்தை கொண்டும் நாம் கோபப்பட்டு பரிசு பணத்தை இழந்து விடக்கூடாது என்று தனக்குள்! ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.


நடுவர் ஜோதிடரிடம் மூன்று கேள்விகளை கேட்க உள்ளதாகவும், அதற்கு சரியான பதில் அளித்தால் பரிசு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துரைத்தார். 


ஜோதிடரும் அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு! 

தலையாட்ட!!

கேள்விகள் ஆரம்பமானது.


நடுவர் கேட்ட முதல் கேள்வி -

"விரதங்கள் எத்தனை வகைப்படும்"?

அதற்கு நம் ஜோதிடர் விரதம் இருப்பவர்களின் உடல் நிலையை சார்ந்து பல வகைகளாக பிரிக்கலாம்! என்று பதில் கூற நடுவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. 


சரி போகட்டும்!

 என்று அடுத்த கேள்வியை முன் வைத்தார் நடுவர்.


கேள்வி II :-

அதாவது தெய்வத்திடம் மட்டுமே  சென்று உங்கள் கோரிக்கைகளை ஏன் சொல்கிறீர்கள்? என்று கேட்க நம் ஜோதிடர் 


கடவுள் ஒருவர் மட்டும் தான் நம் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு லஞ்சமாக பணமோ, பணம் சார்ந்த எந்த பொருளையும் கேட்பதில்லை. 


முக்கியமாக எந்த சூழ்நிலையிலும் நம்மிடம் ஏன்? எதற்கு? எப்படி?  என்ற கேள்வி கேட்காதரொம்ப நல்லவர் தான் நம்ம கடவுள்! என்று கூற கடுப்பான நடுவர் இறுதி கேள்வியை முன் வைத்தார்.


கேள்வி எண் 3 :-

சுவாமிக்கு நைய்வேத்தியம் செய்வதன் காரணம் என்ன? என்று கேட்க..


அதற்கு நம் ஹுரோ

அவசியமாக! கண்டிப்பாக!! உண்மையாக!!!  இந்த கேள்விக்கான  பதிலை நான் சொல்லியே ஆக வேண்டும்! 


எனென்றால்!....  என்று கூறி ஜோதிடர் நிறுத்த!...


நடுவருக்கும், பங்கேற்ற வந்த மக்களுக்கும் இருப்பு கொள்ளவில்லை.

சீக்கிரம் இதற்கான பதிலை கூறுங்கள் என்று ஜோதிடரிடம் வேண்டுகோள் விடுக்க....

ஜோதிடரும் சற்றும் தாமதிக்காமல் 


ஏனென்றால் கடவுளுக்காக  நாம் படையலிடும் உணவை   உண்பதற்க்கு கடவுள் என்றைக்கு  நேரில் வந்திருக்கிறார்? படையலிட்ட சோறும் நமக்கே!

அதனை சார்ந்துமற்ற பதார்த்தங்களும் நமக்கே!!

என்று நம் ஹுரோ கூறிய பதிலை கேட்ட நடுவர் 

விட்டால் போதும்! என்று பரிசு தொகையையும், சான்றிதழையும் நம் ஹீரோ ஜோதிடரிடம் ஒப்படைத்து விட்டு மனம் வெறுத்து சந்நியாசம் சென்று விட்டதாக நமக்கு தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


பலத்த கைதட்டலுக்கு மத்தியில் பரிசு தொகையை வென்று! பால்காரன் கணக்கையும் தீர்த்த!! நம் கதாநாயக ஜோதிடர் எதிர்பாராமல் கிடைத்த இந்த பெயரையும்! புகழையும்!!

இனி வரும் காலங்களிலும் தக்கவைத்து கொள்ளவேண்டுன்று

மாங்கு! மாங்கென்று இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.


அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்தால்? 

அட....


இதை படிக்கும் உங்கள் கண்களில் ரத்த கண்ணீர் வந்தால் அதற்கு நான் ஆகிய மீனாக்ஷி ஜோதிடாலயம் பொருப்பல்ல... என்பதை  அறிவித்து, தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

"ரத்தினங்களின் அரசன்" என்று மன்னர்களால் பெரிதும் புகழபட்ட ரத்தினம் மாணிக்கம் (Ruby).

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவகிரகங்களில் இராகு பகுதி :- 3.