நவரத்தினங்ளில் வைரம் பகுதி 2.
நவரத்தினங்ளில் வைரம் பகுதி 2.
நவரத்தின கற்களின் மகத்துவம் பற்றி பாமர மக்களும் அறிந்து கொள்ள வேண்டும்! என்ற அடிப்படையிலும்,
நவரத்தின கற்கள் பற்றிய விழிப்புணர்வுமக்கள் மத்தியில் எற்பட வேண்டும்!! என்ற எண்ணத்திலும்
நவரத்தின கற்கள் பற்றிய இந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
12 ராசிகளில் வைரத்தை பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இனிவைரத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம் ....?
ரிஷபராசி,துலாராசி,மற்றும் பரணி,பூரம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்,
ஜாதகத்தில் சுக்கிரதசை நடப்பில் உள்ளவர்கள்,
எண் கணித முறைபடி 5,6ம் தேதியில் பிறந்தவர்கள் வைரத்தை பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயமாக நீங்கள் சரியான பலன்களை பெறமுடியாது.
உதாரணமாக ஒருவருக்கு மீன லக்னம் தற்பொழுது சுக்ரதசை நடப்பில் உள்ளதென்றால் நிச்சயமாக அவர் வைரத்தை பயன்படுத்தகூடாது. நான் சொல்ல வருவதை சரிவர புரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஜாதகத்தில் சுக்ரனுடைய பலத்தை ஆராய்ந்த பின்பு வைரத்தை தேர்தெடுப்பது மிகவும் நல்லது.
வைரமும், நீலகற்களும் உடனடியாக பலன்களை தரக்கூடியது.
ஒருவேளை நீங்கள் அணியும் வைரகற்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படவில்லை என்றால் சட்ட சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.
ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள்அல்லது சுக்ரதசை உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்தை ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் கலந்து ஆலோசித்த பின்பு வைரத்தை அணிவது மிகவும் நல்லது.
ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட.....
meenaksheJothidalayam 2010.blogspot.com
meenakshe-Jothidalayam.business.site
meenakshe Jothidalayam /YouTube
ஜோதிட ஆலோசனை/மீனாக்ஷி ஜோதிடாலயம்/ Facebook
வைரம் வாங்க இயலவில்லை என்றால் அதற்க்கு மாற்றாக ஜெர்கான் என்ற ரத்தினத்தை பயன்படுத்தலாம்.
இது மிகவும் விலை குறைவு.
குறைஇல்லாத வைரத்தை பயன்படுத்தும் பொழுது உங்கள் உடல் மற்றும் முகம் வசீகரம் அடையும்.
பித்தப்பை சரிவர வேலை செய்யும்.
நல்ல நண்பர்களின் தொடர்பு ஏற்படும்.
வாழ்க்கை வசீகரம் அடையும்.
பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் மத்தியில்
மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்துவதில் வைர கற்களுக்கு மிக முக்கிய பங்குண்டு.
பெண்கள் வைர நகைகள் அணிவதற்கு முன்பு உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் கலந்து ஆலோசித்த பின்பு அணிவது நலம்.
வைரநகை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றால்
பித்தப்பை, கல்லீரல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
பெண்களுக்கு வைரம் சாதகமாக செயல்படும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் எற்படும்.
தங்க நகை ஆபரணங்கள் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கு முகவசீகரத்தையும் ஏற்படுத்தும்.
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
அலைபேசி எண்
9500922576.
Comments
Post a Comment