நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-
ரத்தினங்களை பற்றி நாம் பார்க்கும் முன்பு நாம் வசிக்கும் பூமி பந்தை பற்றி சற்றே பார்க்கலாம்.
நமது பூமி பந்து போன்ற உருண்டை வடிவமானது.இதன் விட்டம்(Diameter) சுமார் 13,000 கிலோ மீட்டர்கள்.புரியும்படி சொன்னால் நீங்கள் இப்போது நிற்கும் இடத்திலிருந்து பூமியில் துளையிட்டு கொண்டே சென்றால் 13,000 கிலோ மீட்டர் துளையிட்ட பின்னர் பூமியின் நேர் பகுதியை அடைய முடியும்.இந்த பகுதியை மூன்றாக பிரித்தால் நடுபகுதி(Core of earth) இதை கருப்பகுதி என்று அழைப்பார்கள்.இதற்க்கு மேல் உள்ள பகுதி மான்டில்(Mantle) என்று அழைப்பார்கள்.இதற்க்கு அடுத்து உள்ள பகுதி பூமியின் மேற்பரப்பு (Creast) என்று அழைப்பார்கள்.இந்த பகுதி சற்றே மிருதுவான பாறைகளால் ஆனது.மார்பிள் மற்றும் கிரானைட் பாறைகள் உள்ள பகுதி.இதில் ரத்தினங்கள் உருவாகும் பகுதி பூமியின் மையபகுதி.உலோகம் மற்றும் கனிமங்கள் அழுத்தம் அதிகம் ஆகும் பொழுது மைய பகுதியிலிருந்து மேலெழும்பி மான்டில் பகுதியிலுள்ள பாறைகளின் இடுக்குகள் வழியாக வருகின்றன.மேலே வரவர வெப்பம் குறைந்து ஆவி நிலையிலுள்ள கனிமங்கள் திரவ நிலை அடைகின்றன.நிராவியும் குளிர்ந்து நீராகி கனிமங்கள் அதில் கரைந்து படிகங்கள் உருவாகின்றன.மான்டில் பகுதியிலுள்ள வெப்பத்தாலும்,அழுத்தத்தாலும் படிகங்கள் இறுகி ரத்தினங்களாக மாறுகின்றன.கனிமங்களின் வகைகளை பொருத்து ரத்தினங்களின் நிறமும்,தன்மையும் மாறுகின்றன.ரத்தினங்கள் உருவாவது என்பது ஏதோ ஒரிரு வருடங்களில் நடந்து முடியும் செயல் அல்ல.வைரங்கள் உருவாக பல மில்லியன் வருடங்கள் தேவை.
வைரத்தை பற்றி சற்றே விரிவாக பார்க்கலாம்.
மிக விலைஉயர்ந்த கற்களில் ஒன்றாக கருதபடுவது வைரம்.கரி துண்டின் மற்றொரு வடிவம் தான் வைரம்.நம்புவது சற்றே கடினமாகதான் இருக்கும்.ஆனால் அதுவே உண்மை.கரிதுண்டும் வைரமும் அடிப்படையில் கார்பன் மாலிக்யூல்களால் (Molicuels) ஆனவை.மாலிக்யூல்கள் என்பது வேதி பொருட்களின் கலவை.கரியிலும்,நிலகரியிலும் கிராபைட்,வைரம் அனைத்திலும் இருக்கும் மூலப்பொருள் ஒன்று தான்.அதாவது கார்பன்.இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும். நாளை வைரத்தை யார் பயன்படுத்தலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஜோதிடம் மற்றும் நவரத்தின கற்களை பற்றிய ஆலோசனை பெற 9500922576 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாட்சி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment