மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொதுபலன்கள் 2ம் பகுதி :

 மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொதுபலன்கள் 

2ம் பகுதி :


மேஷ ராசிக்கு பஞ்சம ஸ்தானமான சிம்ம ராசியில் சூரியன் செவ்வாய் இணைவு அரசாங்க உத்தியோகத்திற்க்கான வாய்ப்பை ஜாதகருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனாலும் மன சஞ்கலம் ஜாதகருக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.


மகரத்தில் குரு, சனி சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் சமூகத்தில் உயர்ந்த மதிப்பு, அந்தஸ்து, செல்வாக்குடன் வாழ்வார்கள் 


கடகத்தில் செவ்வாய், சந்திரன் சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் விவசாயம், ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்கள் மூலம் நல்ல லாபம் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் மேலும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்பும் உண்டாகும். 


சிம்மத்தில் சூரியன், புதன் சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் நுண்ணறிவுடன் கூடிய புத்திசாலித்தனத்துடன் இருப்பார். 


மேஷ ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் நிலையை பொறுத்து அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற முடியும். பெரும்பாலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு குலதெய்வம் ஆண் தெய்வமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. 


மேஷ ராசியில் செவ்வாய், சூரியன் இணைவு எந்தவிதத்திலும் ஜாதகருக்கு நல்லதல்ல. 


விருச்சிகத்தில் செவ்வாய், சந்திரன் இணைவு ஜாதகருக்கு பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். 


மேஷராசிக்காரர்களுக்கு செவ்வாய், சனி இணைவு எந்த ராசியில் இருந்தாலும் அந்த ராசியின் தன்மையை பொறுத்து ஜாதகருக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்திவிடும். 


மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை நடப்பில் வரும்பொழுது மிகுந்த கவனமுடன் இருங்கள். கல்லீரில், கணையம், பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 


பொதுவாக இந்த ராசியில் பிறந்தவர்கள் பழனி முருகப் பெருமானை வருடத்திற்கு மூன்று முறை தரிசனம் செய்ய காரிய தடை விலகி நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். 


ஞாயிறு, திங்கள், வியாழன் உகந்த நாட்கள். 


செவ்வாய், சுக்கிரன் இணைவு ஜாதகரின் மனைவியுடைய நல்ல குணநலன்களை மாற்றி விட வாய்ப்புண்டு. 


ராசியாதிபதி செவ்வாய் 6.8.12 ஆக வரக்கூடிய ராசிகளில் மறைந்திருந்தால் கார்த்திகை தோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட பிரச்சனைகள் சூழாமல் ஜாதகர் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். 


மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் இந்த பலன்கள் பொருந்தும். இனி ரிஷப ராசியை பற்றி நாளை பார்க்கலாம். 


மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொதுபலன்களை எழுதியுள்ளேன்.


என்றும் ஜோதிட இறைபணியில் ஜோதிட சொற்பொழிவாளர் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.


ஜோதிடரின் கருத்தாழமிக்க ஜோதிட கருத்துக்களை பார்வையிட......


Meenakshe Jothidalayam / Youtube

Meenakshe Jothidalayam / Google

Meenakshe Jothidalayam / Facebook 

Meenakshejothidalayam2010.blogspot.com


தொடர்புக்கு : 9500922576.

Comments

Popular posts from this blog

நவரத்தினம் சொல்லும் "காதல்!" கவிதையை பற்றி ......

நவ ரத்தினங்களை பற்றிய பாடம் :-

சந்திரன், ராகு சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் எந்த ஒரு காரியத்திலும் நன்கு சிந்தித்து ............