மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொதுபலன்கள் 2ம் பகுதி :
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொதுபலன்கள் 2ம் பகுதி : மேஷ ராசிக்கு பஞ்சம ஸ்தானமான சிம்ம ராசியில் சூரியன் செவ்வாய் இணைவு அரசாங்க உத்தியோகத்திற்க்கான வாய்ப்பை ஜாதகருக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனாலும் மன சஞ்கலம் ஜாதகருக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். மகரத்தில் குரு, சனி சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் சமூகத்தில் உயர்ந்த மதிப்பு, அந்தஸ்து, செல்வாக்குடன் வாழ்வார்கள் கடகத்தில் செவ்வாய், சந்திரன் சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் விவசாயம், ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்கள் மூலம் நல்ல லாபம் பெறுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் மேலும் வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்பும் உண்டாகும். சிம்மத்தில் சூரியன், புதன் சேர்க்கை இருக்க பிறந்த ஜாதகர் நுண்ணறிவுடன் கூடிய புத்திசாலித்தனத்துடன் இருப்பார். மேஷ ராசியில் பிறந்தவர்கள் சூரியனின் நிலையை பொறுத்து அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெற முடியும். பெரும்பாலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு குலதெய்வம் ஆண் தெய்வமாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. மேஷ ராசியில் செவ்வாய், சூரியன் இணைவு எந்தவிதத்திலும் ஜாதகருக்கு நல்லதல்ல. விருச்சிகத்தி...