கருடாழ்வாரின் பெருமைகள் பற்றி மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......
கருடாழ்வாரின் பெருமைகள் பற்றி மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடரின் பார்வையில்......
ஆடி மாதம்,சுக்ல பட்சமும், பஞ்சமி திதியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அவதரித்தவர் தான் கருடாழ்வார். ஆண்டாளின் வளர்ப்பு தந்தையான பெரியாழ்வார் கருடனின் மறுஅவதாரமாக சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆழ்வார்கள் தம் பாடலில் இவரை கொற்றப்புள், தெய்வப் புள், காய்ச்சினபுள் என்று அழைக்கின்றனர். ஆண்டாள் அன்பு மிகுதியால் கருடாழ்வாரை புல்அரையன் என்று அழைக்கின்றார். பதினெண் புராணங்களில் கருடபுராணமும் கருட பெருமைக்கு ஒரு சான்று. நீத்தார் பெருமையும், அவர்களுக்குரிய கடன்கள் பற்றியும், உயிர், ஆத்மா இவற்றின் பயன்கள் பற்றியும் இந்த புராணம் விரிவாக சொல்கிறது. திருமலையில் உள்ள சப்தகிரி மலைகளில் ஒன்றுக்கு கருடாத்ரி என்ற பெயரும் உண்டு. மகாபாரதத்தில் இறுதிப் போரில் பாண்டவர்கள் கருட வியூகம் அமைத்துதான் கௌரவர்களை வென்றதாக மகாபாரத காவியத்தில்
சொல்லப்படுகிறது. தஞ்சை மாநகரமே கருட வியூகத்தில் உள்ளது என்பது செவிவழி செய்தி. நம் நாட்டின் முத்திரை சிம்மமும், அசோகச் சக்கரமும். அதேபோல் தாய்லாந்து நாட்டின் முத்திரை கருடனே. இது அந்த நாட்டு நாணயங்களில் காணப்படும். கருட பத்து என்ற செய்யுளை பாராயணம் செய்வதால்
விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபாயமும், தொற்று நோயால் ஏற்படக்கூடிய பாதிப்பும் முற்றிலும் நீங்கும். கருடாழ்வாருக்கு பெரிய திருவடி என்ற மற்றொரு பெயரும் உண்டு. பத்மன், மகா பத்மன், சங்கன்,குளிகன்,வாசுகி போன்ற எட்டு வகையான நாகர்களை ஆபரணங்களாக அணிந்திருப்பர் கருடாழ்வார். இராகுவால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள்,மேலும் பட்சி சாபம் விலகுவதற்கும், கெட்ட சக்திகளின் ஆதிக்கத்தீலிருந்து விலகுவதற்கும் ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் கருடாழ்வாரை தரிசித்தாலே போதுமானது. பெருமாளின் அவதாரங்களுக்கு கருடாழ்வாரும் ஒரு காரணம் என்ற செய்தியும் உண்டு. கருடாழ்வாரையும், பத்மாவதி தாயாரையும் வழிபட்ட பின்பு பெருமாளை தரிசிக்க சகல தோஷங்களும்,பாவங்களும் விலகி சுபிட்சமான வாழ்க்கையை அடைவீர்கள் என்பது கண்கூடான உண்மை. பஞ்சமி திதி அல்லது சுவாதி நட்சத்திரத்தில் கருடாழ்வாரை வழிபட எம்பெருமான் நாரயணனுடைய அனுகிரகம் பெற்று வாழ்வாங்கு வாழ மீனாக்ஷி ஜோதிடாலயம் கருடாழ்வாரை பிறார்த்திக்கின்றது.
என்றும் ஜோதிட இறைபணியில் மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment