குருபகவான் ஒரு பார்வை :-
குருபகவான் ஒரு பார்வை :-
கிரகப்பெயர்ச்சிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது குரு பெயர்ச்சியாகும். மிகுந்த சுபத்தன்மை வாய்ந்தவர் குருபகவான்.
குருபகவான் அமரக்கூடிய இடங்களை விட அவருடைய பார்வை படும் ராசிகளுக்கு மிகுந்த சுபத்தன்மை கிட்டும். 5 7 9-ஆம் பார்வையாக குருவால் பார்க்கப்படும் ராசிகள், ஜாதகருடைய பூர்வ புண்ணிய தன்மைக்கு ஏற்றவாறு சுப பலன்களை கொடுப்பது நிச்சயம். குரு பகவானுக்கு என்று எந்த ஒரு பரிகாரமும் தேவையில்லை. உங்களுடைய சுய ஜாதகத்தில் குரு பகவானுடைய நிலை எப்படி இருந்தாலும், குரு பகவானுடைய கோட்சார நிலை சரியில்லாமல் இருந்தாலும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான்.
அதாவது நம்முடைய பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், வணங்கத்தக்க மகான்களையும் நாம் தலைகுனிந்து வணங்கி அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றாலே போதுமானது.
மானச தீட்சையை பற்றிய என்னுடைய சொற்பொழிவில் நான் பேசும் பொழுது ஆசிரியருக்கும், (குருவுக்கும்) மாணவனுக்குமான உறவு எவ்வாறு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி பதிவு செய்துள்ளேன். நான் சொன்ன வழிமுறைகளை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது நிச்சயம் குருபகவானால் உங்களுக்கோ, உங்களுடைய குடும்பத்தினர்களுக்கோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
மாறாக குருவின் ஆசிர்வாதத்துடன் நல்ல மனிதர்களின் தொடர்பு ஏற்பட்டு உங்கள் சுற்றத்தார் மத்தியில் மதிப்புடனும், மரியாதையுடனும் வாழக்கூடிய தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.
நவகிரகத்தில் வீற்றிருக்கும் குருபகவானும், தெற்கு நோக்கி விருட்சத்தின் கீழ் அமர்ந்து அருள் தரும் தட்சிணாமூர்த்தியும் குணங்களில் ஒன்று பட்டவர்கள்.
ஆத்மஞானம்,ஆழமான அறிவு, கருணை மிகுதியால் ஏற்படும் கடைக்கண் பார்வை ஆகியவற்றிற்கு உரித்தாக விளங்குபவர் குருபகவான். சுபத்தன்மை மிகுந்த குருபகவானின் கடைகண் பார்வையால் உங்கள் வாழ்வு நல்வாழ்வு ஆக மீனாட்சி ஜோதிடாலயம் குருபகவானை பிரார்த்திக்கின்றது.
என்றும் ஜோதிட இறைபணியில்
மீனாக்ஷி ஜோதிடாலயம் ஜோதிடர் 'தனுசு' பா.பிரபாகரன்.
Comments
Post a Comment